கோவை அருகே போதையில் நடுரோட்டில் உறங்கிய மதுப்பிரியர் - பொதுமக்கள் மீட்டு சாலையோரம் படுக்க வைத்தனர்

கோவை பார்க் கேட் நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே நடுரோட்டில் மதுப்பிரியர் ஒருவர் குடி போதையில் படுத்துறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சேர்ந்து அவரை சாலையோரத்தில் படுக்க வைத்துள்ளனர்.



கோவை: கோவையில் குடிபோதையில் மதுப்பிரியர் ஒருவர் நடுரோட்டில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை பார்க் கேட் நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள் மற்றும் டீ கடைகளும் இயங்கி வருகின்றன. 

காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிகமானோர் நடைபயணம் மேற்கொள்வர். குறிப்பாக இப்பகுதியில் வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம் ஆகியவை இருப்பதால் மாலை வேலைகளில் குழந்தைகளுடன், பெரியவர்கள் குடும்பம் குடும்பமாய் அப்பகுதியில் பொழுதை கழிப்பதும் வழக்கம். எனவே இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும். 

இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே அதிக மது போதையில் நபர் ஒருவர் நடு ரோட்டில் படுத்து உறங்கியுள்ளார். முதலில் அவரே எழுந்து விடுவார் என்று பலரும் எண்ணிய நிலையில் அவர் எழுந்திரிக்காமல் உறங்கி கொண்டே இருந்துள்ளார். 

இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் கடைக்காரர்கள் சேர்ந்து அவரை எழுப்ப முயன்றனர். அப்போது அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்ததாலும் அதிக மது போதையில் இருந்ததாலும் அவரால் எழுந்து நிற்க இயலாமல் போனது. 

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்களே அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். மது போதையில் நடு ரோட்டில் படுத்து உறங்கிய நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...