கோவையில் கனமழை - இடி விழுந்ததால் பற்றி எரிந்த தென்னை மரம்!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று, உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே, ரத்தினபுரி அருகே இடி விழுந்ததில் தென்னை மரம் பற்றி எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை: கோவையில் இன்று கனமழையின் போது இடி விழுந்ததில் தென்னை மரம் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 



அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 



குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. 

அதே சமயம் உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர்.



அப்போது மேம்பாலங்களில் இருந்து விழுந்த மழைநீர் தொடர் நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது.



இந்நிலையில் கோவை ரத்தினபுரி அடுத்த சாஸ்திரி வீதியில் பலத்த மழை பெய்த நிலையில் இடி விழுந்து தென்னை மரம் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...