சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.87 அடியாக சரிவு!

கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 

பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது. அதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது.

தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று நிலவரப்படி 2.85 அடியாக குறைந்தது. இதனால் குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து 3.60 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. 

வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது, 

ஜூன் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.

மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டை போல பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...