கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா!

துடியலூர் அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

துடியலூரை அடுத்த கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுழற்சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டித்திறப்பு விழா நடைபெற்றது. 



இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இதனை கருத்தில் கொண்டு கோவை அக்மி சுழற்சங்கம் 133, கோவை யுனைடட் சுழற்சங்கம் 186, தாரணி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.18 லட்சம் செலவில் இரு வகுப்பறைகளை புதிதாக கட்டித்தர இசைந்து கட்டிட பணிகள் நடந்து வந்தன.



பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாரதி செல்வம் தலைமை வகித்தார். 



சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, சுழற்சங்கங்களின் தலைவர்கள் ஆர்.ஆர்.வித்யாசாகர், எஸ்.ராகுல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 



தொடர்ந்து பள்ளியில் சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



விழாவின் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...