சட்டவிரோதமாக குழாய் பதிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் - ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு!

காரமடை அடுத்த பல்லேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை காரமடை அருகே ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவகுமார் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அவரது விவசாய தொழிலுக்காக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் குழாய் பதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் மனு அளிக்க வந்த நபர்கள் தங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, குழாய்களை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கை வலியுறுத்தினர். 

இதுகுறித்து மாநிலத் தலைவர் வேலுச்சாமி கூறியதாவது, காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருகிறார். 

இவர் அங்குள்ள அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டால், மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...