கோவையில் பள்ளி மாணவர்களின் மதநல்லிணக்க ஒருமை பயணத்தை துவங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்!

கோவை கோனியம்மன் கோவிலில் சாந்தி ஆசிரம், சமய நிறுவனங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மதநல்லிணக்க ஒருமை பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.



கோவை: கோவையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மதநல்லிணக்க ஒருமை பயணத்தை துவங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாந்தி ஆசிரம், சமய நிறுவனங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒருமை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஜூன் 21 நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஒற்றுமை பயணத்தில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயணத்தை மிகச்சிறப்பான முறையில் துவங்கி வைத்தார். 

இந்த பயணத்தில் 14 பள்ளிகளை சார்ந்த 70 குழந்தைகளும் 15 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த பயணமானது கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கி, குருத்வாரா சிங் சபா, அத்தார் ஜமாஅத் மஸ்ஜித், ஜெயின் கோயில், பிஷப் பேராலயத்திற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு போத்தனூர் காந்தி நினைவகத்தில் நிறைவடைந்தது. 

இந்த நிகழ்வில் மாணவர்களிடையே துவக்க உரையாற்றிய கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, 



உயிரினங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமைகளை ஆராய்ச்சி செய்த டார்வினின் உழைப்பு பரிமாண வளர்ச்சி கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் உயிரினங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை ஆராய்ந்த கால்டனின் முடிவுகள் மனித இனத்தில் பிரிவினையை உண்டாக்கி பல போர்களுக்கு வழிவகுத்தது. 

எனவே நாம் அனைவரும் சமம். வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமைகளை அறிந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு வழிவகுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக சாந்தி ஆசிரமத்தின் இளைஞர் தலைமைப்பண்பு பகுதியின் தலைவர் விஜயராகவன் நிகழ்ச்சியின் வரவேற்புரையும் நோக்கங்களையும் எடுத்துக் கூறினார். 



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உறுதுணையாக ஜமாஅத் ஹி இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் பயணத்தில் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...