மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் ஆதரவுடன் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் புலியகுளம் அருகே உள்ள கிட்னி சென்டர் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரீனா ரோஸ்லின். மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவர் சிவகுமாருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரீனா ரோஸ்லின் கூறியதாவது, நான், எனது கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புலியகுளம் கவுன்சிலர் முனியம்மா மற்றும் அவரின் கணவர் பாலமுருகன் பெயரில், திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் எனது கடையை தர வற்புறுத்தினார். ஆனால் நான் தர மறுத்துவிட்டேன்.
இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென கடையை எடுக்க வற்புறுத்தி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து ரீனா ரோஸ்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.