கோவையில் மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்டத்தில், அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில், மின்வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை கண்டித்து அனைத்தும் மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சோதனை அறிக்கைக்கு பதிலாக அனெக்சர் 1, 2, 3 கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், மின் உரிமம் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்,

வீட்டு உரிமையாளர்கள், சிவில் இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் மின் உரிமம் பெற்ற வயரிங் கான்டிராக்டர்களின் மேற்பார்வையில் மட்டுமே மின்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாத கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கக் கூடாது,

உரிமம் புதுப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், உரிமம் வழங்குதல் புதுப்பித்தல் போன்றவற்றை ஆன்லைன் முறையில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், 42 அடி உயரம் உள்ள வீட்டுமனை கட்டிடங்களுக்கும் 2000 சதுர அடி வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கும் Completion Certificate இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ISI மற்றும் ISO தரச் சான்றுள்ள Duplicate இல்லாத மின் சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுகட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள், பிளம்பர்கள், ஹெல்பர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...