மணிப்பூர் கலவரம் - பாஜக அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தையொட்டி 2 பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கலவரத்தை தடுக்க தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் பிரதமர் மோடி பதவி விலக கோரியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் பேசியதாவது,

மணிப்பூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. 2 பெண்கள் நிர்வாணமாக ஆடைகள் களையப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடியினர் மக்களை காக்க தவறிய மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் மக்கள் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...