துடியலூர் அடுத்த அசோகபுரத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கும் பணிகள் தொடக்கம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்படிவம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.



கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்.

கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேசன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஒன்றியக்கவுன்சிலர் கலா சாந்தாராம், செந்தில் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...