தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்!

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை முதல் அமராவதி ஆறு வரை ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் அமராவதியை வரவேற்கும் விழாவாகும்.

இதனையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து அமராவதி தாயை வழிபட்டனர். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.



500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை வீதி டி.எஸ் கார்னர் பெரிய கடை வீதி எண்பேட்டை 5 சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை வந்து அடைந்தனர்.



அங்கு அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை அமராவதி ஆற்றில் விட்டனர்.



அமராவதி ஈஸ்வரன் கோவிலில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் முருக பெருமானை பற்றி பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது அங்கே ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



முளைப்பாரி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் ட்ரம் செட் அடித்து ஆட்டம் பாட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...