முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் - அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதி பேரணி!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவையில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் 6 அடி உயர சிலையுடன் , திமுகவை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அமைதி பேரணி நடைபெற்றது.



கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது திருவுருவ சிலை மற்றும் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சுமார் 6 அடி கலைஞர் சிலை, மற்றும் கலைஞரின் பதாகைகள் எந்தியபடி அமைதி பேரணி நடைபெற்றது.



நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக துவங்கிய பேரணி நஞ்சாப்ப சாலை வழியாக காந்திபுரம் அண்ணா சிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் திமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசியதாவது,



அனைத்து கட்சியினர் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடைய மனதிலும் கலைஞர் இடம்பெற்றுள்ளார்.

பல்வேறு திட்டங்களை நிறைவேறுவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி காரணமாக இருந்துள்ளார். அவரது, பெருமையை எல்லா இடத்திற்கும் கொண்டு சென்று சேர்ப்பது எங்களது எண்ணம் இல்லை.

கட்சி சார்பில் செய்யக்கூடியவை இருந்தாலும், அரசு சார்பாக இதை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல திட்டங்கள், நலத்திட்டங்கள் போய் சேர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கருணாநிதி பிறந்தநாள் என்பது ஒரு நன்மை செய்யக்கூடிய வகையில் ஓராண்டு கொண்டாடப்பட்டு அவருடைய பெயரை சொல்லி மக்களுக்கு நன்மை போய் சேர்வதற்காக இதை செய்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக மனதில் உள்ள வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக இந்த பேரணி நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...