ஆடி கடைசி வெள்ளி விழா கொண்டாட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி கடைசி வெள்ளி விழாவில் நடைபெற்ற அசுவ மேத வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.



கோவை: ஆடி கடைசி வெள்ளியையொட்டி பத்தரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் குதிரை இரு கால்களையும் தூக்கி அம்மனை வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.



அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு துதி பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கோவை சத்தி சாலை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 52 வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது.

ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற விழாவில் இறுதி வெள்ளிக்கிழமையாக நேற்றைய தினம் ஆவணி ஒன்றாம் தேதிவெள்ளிக்கிழமையில் ஆடி ஐந்தாவது வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவமூர்த்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிவனடியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. ஜமாப் இசையுடன் பம்பை உடுக்கை முழங்க அம்மனுக்கு ஆரத்திகள் எடுக்கப்பட்ட நிலையில் குதிரை நிறுத்தி வைக்கப்பட்டு அசுவ மேத வழிபாடும் நடத்தப்பட்டது.



அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவமூர்த்தியான அருள்மிகு பத்திரகாளியம்மன் எழுந்தருள அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தகுதிரை இரு கால்களையும் தூக்கி வணங்கிய காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற அம்மன் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை துதித்து பாடியபடியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...