மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் ஹிப் ஹாப் ஆதி - ஆளுநரிடம் பட்டம் பெறுவதற்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேட்டி

மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருப்பதாக திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.



கோவை: தமிழர் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் வாங்குவது குறித்து ஹிப் ஹாப் ஆதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியும் முனைவர் பட்டம் பெறுகிறார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தாகவும், இப்போது அது நிறைவுற்று இருப்பதாகவும் கூறினார்.

முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். வேறு வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்ததாகவும், அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய படம் வரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என பதிலளித்தார்.

மேலும் சந்திராயன் 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கின்றது என்றும் கூறினார். மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருக்கிறது என கூறிய அவர், அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...