சூலூரில் காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்!

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த காலை உணவு திட்ட துவக்க விழா கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.

முன்னதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.கீதாஞ்சலி, வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரை நிகழ்த்திய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாட்டில் இன்று துவக்கப்படும் காலை உணவு திட்டம் மாபெரும் வெற்றி பெறும்.



இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவார்கள். அவர்களது கல்வித்திறன் மேம்படும் . பொதுக் கல்வியை பலப்படுத்த இத்திட்டம் உதவி செய்யும். இன்று சந்திராயன் 3 வெற்றியை நாடே கொண்டாடுகிறது.

இந்த மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை. அதைவிட முக்கியமானது அந்த மூன்று திட்ட இயக்குநர்களும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் . எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றார்.

தனது கனவு திட்டமாக இதை இவர் முன்னிறுத்துகின்றார். ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல்வேறு சமுக நலத்திட்டங்களை போலவே, முதலமைச்சர் முத்தாய்ப்பான இந்த திட்டமும் முழு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துவக்க விழா நிகழ்வில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி அவர்கள், சூலூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.ஜெயக்குமார், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், முருகசாமி, ஆனந்தன், இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...