கோவை மாவட்டத்தில் 859 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள 859 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 44,358 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த பள்ளிகளிலேயே உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனை கண்காணிக்க 15 பள்ளிகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 121 மாநகராட்சி பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 15 வட்டாரங்களில் உள்ள 859 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.



இதன் மூலம் 44,358 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் கிராந்திகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 136 பள்ளிகளில் 17,621 குழந்தைகள் உணவு அருந்தி வருகிறார்கள்.

தற்போது 2-வது கட்டமாக மேலும் கூடுதலாக 859 பள்ளிகளில் 44,538 குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டி ணத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிகளிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த பள்ளிகளிலேயே உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க 15 பள்ளிகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரு செயலி மூலமாக எப்போது சமையல் தொடங்கியது, சாப்பாடு வழங்கும் நேரம், எத்தனை பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது என்ற எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை மற்றும் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அவ்வபோது ஆய்வு செய்து உணவின் தரம் எப்படி உள்ளது? என்பதை கண்காணிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு பேரூராட்சி கதிர்வேல், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...