தாராபுரம் அருகே போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு திருப்பூரைச் சேர்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசன்நாயக்கம்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையில், அருண்பாபு, ஹரி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனலட்சுமி என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மருத்துவமனையை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (50) முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.



கடந்த ஆறு மாத காலங்களாக போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தாசநாயக்கன்பட்டி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், முறையாக மருத்துவம் படிக்காமல் தாசநாயக்கன்பட்டி பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதேபோல் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் உள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தாராபுரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...