ஆவண மற்றும் குறும்படங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குக - தேசிய விருது பெற்ற இயக்குனர் லெனின் வலியுறுத்தல்!

69வது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ ஆவண படத்தை உருவாக்கிய இயக்குனர் லெனினுக்கு கோவை கிளஸ்டர் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியபோது, ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என இயக்குனர் லெனின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் 69வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதில் பிரபல எடிட்டரும் - இயக்குனருமான பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான "சிற்பிகளின் சிற்பங்கள்" சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வி மற்றும் அதை கற்று கொடுக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக உருவாக்கி உள்ள சிற்பிகளின் சிற்பங்கள் ஆவண படத்தை உருவாக்கிய லெனினுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா கோவை கிளஸ்டர் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்றது.

இதில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இயக்குநர் பி.லெனின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நமக்கு தெரிந்த ஒருவர் சிறுவயதில் படித்த காலத்தில் நன்றாக பாடம் நடத்தி சிறந்த ஆளாக்கிய ஆசிரியர் பற்றி ஒரு டாக்குமென்டரி எடுக்க கேட்டு கொண்டதிற்கிணங்க எடுத்தேன். ஆனால், ஓரு ஆசிரியருடன் நின்றுவிடாமல் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஓரு ஆசிரியர் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருப்பார்கள்.

அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து ஒரு ஆவணமாக இந்த ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ஆவண படத்தை உருவாக்கினேன். மேலும் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்னர், பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டதாகவும் அதில் முழுவதும் இலவசமாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தற்போது, அதேபோல் தமிழக அரசு குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக, இந்தியாவில் அதிக குறும்படங்கள் தமிழகத்தில் தான் எடுக்கப்படுகிறது. ஆவணப் படங்கள்,குறும்படங்கள் ஆகியவற்றை எடுக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறிய ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், குழந்தைகளுக்கான தனிப்படங்களை குழந்தைகளே எழுதும் படங்களை தயாரிக்க மானியம் கொடுக்கவும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...