கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஜூன் 23 நிலவரப்படி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.






ஆனைமலையை அடுத்து அமைந்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி 60.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 139 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






பொள்ளாச்சியை அடுத்து அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 16.92 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 103 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 535 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






வால்பாறையை அடுத்து உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி 66.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 384 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




விவசாயிகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு இந்த நீர்வரத்து மிகவும் உதவியாக இருக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...