கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு செயல்முறை ஆணைத்தை விமான நிலைய அதிகாரிக்கு அனுப்பினார் ஆட்சியர்..!!

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் செயல்முறை ஆணையை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.


கோவை: விமான ஓடுதள விரிவாக்கம், வாகனங்களுக்கான பாதை உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் தமிழக அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் போடப்படும் முன்பு, இந்த நிலத்தை குத்தகைக்கோ, உள் குத்தகைக்கோ விடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் செயல்முறை ஆணையை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார். விமான நிலைய விரிவாக்க பணிகள் 14 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வண்ணம் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு மொத்தம் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தித் தருமாறு, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியிருந்தது. அதில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலமும் இருக்கிறது. கோவையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு, கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 627 ஏக்கர் நிலங்கள், காளப்பட்டி, சிங்காநல்லுார், இருகூர், உப்பிலிப்பாளையம், நீலம்பூர் ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில் அமைந்துள்ளது.

அதில், 403 ஏக்கர் பட்டா நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆகியவை, தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் இது தொடர்பான செயல்முறை ஆணையை வெளியிட்டுள்ளார். அதன்படி அதாவது, இந்த நிலம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன், விமான ஓடுதள விரிவாக்கம், வாகனங்களுக்கான பாதை உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் தமிழக அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் போடப்படும் முன்பு, இந்த நிலத்தை குத்தகைக்கோ, உள் குத்தகைக்கோ விடக்கூடாது.வேறு யாருடைய பெயருக்கும் மாற்றவும் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...