அபார ஆற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பல்லடத்தை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன்!

பல்லடத்தை அடுத்த குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் - பிரதீபா தம்பதியின் ஒன்றரை வயது மகன் சாய் மகிழன் விலங்குகள், பறவைகள், தேசிய சின்னங்களின் பெயர்களை சொன்னால் அதனை கண்டுபிடிக்கும் ஆற்றல் மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே அபார ஆற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒன்றரை வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரதீபா. இவர்களுக்கு சாய் மகிழன் மற்றும் விசாக மித்திரன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் சாய் மகிழன் பிறந்த எட்டாவது மாதத்தில் இருந்து வன விலங்குகள், செல்லப் பிராணிகள், பறவைகள், வாகனங்கள், வடிவங்கள், நமது தேசிய சின்னங்கள் ஆகிய புகைப்படங்களை காட்டி அதன் பெயர்களையும் சொல்வதற்கு அவரது தாய் பயிற்சி அளித்துள்ளார்.



ஒன்றரை வயதில் சிறுவன் சாய் மகிழனின் அறிவாற்றலை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற முன்னெடுப்பில் எட்டு வன விலங்குகள், எட்டு செல்லப்பிராணிகள், எட்டு பறவைகள், எட்டு பழங்கள், எட்டு காய்கறிகள், எட்டு வாகனங்கள், 18 வடிவங்கள், 8 உடல் உறுப்புகள், 7 தேசிய சின்னங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களின் பெயரை சொன்னாலே அந்த புகைப்படங்களை கண்டறியும் சாய் மகிழனின் அறிவாற்றலை காணொளியாக பதிவு செய்து Indian book of world records என்ற உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளார்.



சிறுவன் சாய் மகிழனின் இந்த அறிவாற்றலை உலக சாதனையாக "இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளது.

தனது மகனுக்கு உள்ள அறிவாற்றலை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்போடு இந்த காணொளி பதிவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியதாகவும், தற்போது ஒவ்வொரு புகைப்படத்தின் பெயர்களையும் தெளிவாக சொல்லும் அளவிற்கு சாய் மகிழன் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் அவரது தாய் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் சிறுவன் சாய் மகிழன் இடம்பெற்றது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...