கோவை எனும் அதிமுக கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது - வைகை செல்வன் உறுதி!

பொள்ளாச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன், கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என்று கூறினார்.



கோவை: கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் வைகைச்செல்வன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை. அந்த கட்சி அவ்வளவு தான் என பேசினார்கள். ஆனால், நாட்டின் 3வது பெரிய கட்சியாக திகழ வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

கோவை மாவட்டமானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக மாற்றி அவரது கொள்கை மற்றும் கோட்பாட்டை கோவை மாவட்டம் தூக்கிச் சுமந்து வருகிறது.

கோயம்புத்தூர் என்று சொன்னால் அதிமுகவின் கோட்டை, இந்த கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போட முடியாது என்பதை நிரூபித்து காட்டுகிற கோவை மாவட்டம்.

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்தது ஏன்?. நாட்டில் எந்த மாநிலத்திலாவது ஒரு அமைச்சராவது சிறையில் இருக்கிறாரா. அவரை பதவியை விட்டு இறக்காதது ஏன்?. இதனை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...