கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் - கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி

கோவை காந்திபுரம் பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டுமான பணிகளுக்கான பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டுமான பணிகளுக்கான பூஜை நடைபெற்றது.



இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பேருந்து நிறுத்த நிழற்குடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது.

தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு அவர்களின் அவசியங்கள் தொகுதி நிதியில் இருந்து நிறைவேற்றப்படும். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதிகமான பெண் உறுப்பினர்கள் வரும் போது பெண்கள் பிரச்சனைகள் அவர்களின் பார்வையில் இருந்து தீர்வு காணப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதற்காக திமுக அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது? எந்த வாக்குவங்கிக்காக நிறைவேற்றியது? பாஜகவை விமர்சிக்கும் திமுகவின் உண்மையான முகம் எது?. பாஜக கட்சிக்குள்ளேயே 33 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது.

திமுக மந்திரி சபையில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமில்லை. பாஜகவில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக அரசியல் செய்கிறது என சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம். அதை ஊடகங்கள் வாயிலாக சொல்வது முறையல்ல.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணிக்குள் சலசலப்பு வந்தாலும் சரி செய்யப்படும்.

என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. அவமதிப்பதை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது என வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...