பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி உறுதிபடுத்தாமல் ஏன் அமைதியாக இருக்கிறார் - கோவையில் புகழேந்தி கேள்வி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்த வேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவை: இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்வதாக புகழேந்தி கூறியுள்ளார்.

கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிமுக - ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,




இரண்டு மூன்று தினங்களாக காமெடியாக, கைதட்டல், விசில் என போகின்றது. சிங்க கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள். கூட்டணி முடிந்துவிட்டது என்று கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூறி விட்டார்.

ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிகாரர்களை அமைதியாக இருக்கும்படி எடப்பாடி பழனிச்சாமியும் கூறிவிட்டார். ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஒளிந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது நிலைப்பாடுகளை மாற்றக்கொள்ள கூடாது. எடப்பாடி பழனிச்சாமி எல்லாரையும் வாயை மூட சொல்லி விட்டார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அமைதியாக இருக்க சொல்லி எந்த அறிக்கையும் வரவில்லையே என கேள்வி எழுப்பியதற்கு, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் போனது என்று பதில் அளித்தார். 

மேலும் பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்த வேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி உறுதிபடுத்தினால் எடப்பாடி சிறைக்கு செல்வார் எனவும் கோடநாடு கொலை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிச்சாமி மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

எஸ்.பி. வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர். எடப்பாடி பழனிச்சாமியை விட வேலுமணி புத்திசாலி. எடப்பாடி பழனிச்சாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றது. ஆனால் அவற்றின் மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகழேந்தி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...