தாராபுரம் குண்டடத்தில் அண்ணாமலை யாத்திரை - மாற்றுத்திறனாளிக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்ட்டடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணமலை மாற்றுதிறனாளிகள் 30 பேருக்கு இலவச சக்கர சைக்கிள் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள புதிய நவக்கொம்பு பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.

அரவிந்த் தோட்டத்திற்கு வந்த அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை இலவசமாக வழங்கினார்.



மேலும் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரைத்தார்.

நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்குகினார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், அமெரிக்கவாழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்டு துரை, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உலகநாதன், ருத்ராவதி பேரூராட்சி கிழக்கு ஒன்றிய பாஜக மகளிர் அணி தலைவர் கண்ணம்மாள், நான்காவது வார்டு கவுன்சிலர் பாலதண்டபாணி, 5 வது வார்டு கவுன்சிலர் கௌரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...