கோவையில் சாலை பணிகளை திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூரில் நடைபெறும் கோவை மண்டல திமுக பூத் கமிட்டியின் பயிற்சி கூட்டத்திற்கு பங்கேற்க கோவை மார்க்கமாக வந்த முதலமைச்சர் அங்கு சாலைகள் பணிகளை ஆய்வு செய்தார்.



கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சாலை மார்க்கமாக காங்கேயம் புறப்பட்டார்.



இதனிடையே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் விளாங்குறிச்சி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...