அத்திக்கடவு தண்ணீர் வரவில்லை - சூலூர் கிராம மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல்

அத்திக்கடவு திட்டம் தண்ணீர் கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மக்கள் மறியல் காரணமாக திருச்சி- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. ஊராட்சி தற்போது புதிய குடியிருப்புகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள்

இந்நிலையில் இவர்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் மூலம் குடிநீர் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் வரக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் அதிக தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இங்கு தண்ணீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் திருச்சி பொள்ளாச்சி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கையில் காலி குடத்துடன் திருச்சி மற்றும் பொள்ளாச்சி சாலையை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் நின்று உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...