கோவையில் நம்ம ஊரு சந்தை - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒன்றினைத்து இயல்வாகை என்ற அமைப்பு தனியார் பள்ளியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.



கோவை: கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளி, மாணவ மாணவிகளிடையே இயற்கை சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக பள்ளி வளாகத்திலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இயற்கை வழியிலான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் பயிரிடுவது, பயன்படுத்துவது குறித்து கற்பித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இயல்வாகை என்ற அமைப்புடன் இணைந்து இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் நம்ம ஊரு சந்தை என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாஸ்கர் வரவேற்று பேசினார்.



ஒடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் பாரம்பரிய மருத்துவர் மரியா பெல்சின் இயற்கைவழி உணவுப் பொருட்கள் குறித்து விளக்கினார்.



தொடர்ந்து நடந்த சந்தையில் 50க்கும் மேற்பட்ட இயற்கைவழி வேளாண் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் வகையில் தாங்கள் தயாரித்த செக்கு எண்ணெய் வகைகள், கொல்லி மலை இஞ்சி,முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரைகளில் தயாரிக்கப்பட்ட தேனீர் உள்ளிட்ட இயற்கை வழிப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.



இதில் இயற்கை தொடர்பான புத்தகக் கண்காட்சி, நிகர் கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம், தாமரைச் செல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...