பசுமையை நோக்கி செல்வோம், தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம் நிகழ்ச்சி - கோவையில் நாளை தொடக்கம்

பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம் என்ற கருத்தோடு, இந்த திட்டம் நாளை காலை 6.00 மணிக்கு கோவை நகரில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.



கோவை: உக்கடம்- பி1 காவல் நிலையம் அருகே காலை 6.00 மணி, காந்திமாநகர் மெயின்ரோட்டில் 6.30 மணி, கொடிசியா நுழைவு வாயில் 7.00 மணி, சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் காலை 7.15 மணி மற்றும் ஜி.வி. ரெசிடென்சி விநாயகர் கோவில் 7.30 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், செப்டம்பர் 25, 2023 - கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் “பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற திட்டத்தை நாளை (26.09.2023) காலை 6.00 மணிக்கு ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கிவைக்கிறார்.



இது குறித்து ராக் அமைப்பின் கௌரவ செயலாளர் ரவீந்தரன் மற்றும் பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகரன் கூறியதாவது, இந்த செப்டம்பர் 2023 ல், பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் என்ற தலைப்பில், சுற்றுச் சூழல் சுகாதார நாளை செப்டம்பர் 26 ல் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.

சமுதாய பொறுப்போடு சுற்றுச் சூழல் மற்றும் நலன் பயக்கும் 3 சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளோம். கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்வு நடக்கிறது.



இந்த நிகழ்வில் ஸ்ரீரிபு டாமன் பெவ்லி - இந்தியாவின் உழவன், தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இவர், சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் சமுக சேவகர். டில்லியை சேர்ந்த ரிபு டாமன், குப்பை சேகரிப்பு முறையில் நிபுணத்துவம் பெற்றவர். பிளக்கிங் என்ற வார்த்தைக்கு, வேகமாக நடக்கும்போதே குப்பைகளை சேகரித்தல் என பொருள். பொதுவாக, மெல்லிய ஓட்டத்தில் குப்பைகளை சேகரிப்பது தான் இதன் பொருள். இதனால், உடற்பயிற்சியின் போது சுற்றுச் சூழலையும் சீர்படுத்த முடியும். இந்த திட்டத்தை கோவையில் உள்ள ராக் அமைப்புடன் இணைந்து செயல்படுத்துகிறது.

“பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற கருத்தோடு, இந்த திட்டம் நாளை காலை 6.00 மணிக்கு கோவை நகரில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

உக்கடம்- பி1 காவல் நிலையம் அருகே காலை 6.00 மணி, காந்திமாநகர் மெயின்ரோட்டில் 6.30 மணி, கொடிசியா நுழைவு வாயில் 7.00 மணி, சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் காலை 7.15 மணி மற்றும் ஜி.வி. ரெசிடென்சி விநாயகர் கோவில் 7.30 மணி அளவில் நடைபெறுகின்றது.

பிளக்கிங், நமது சுற்றுச் சூழல் சுத்தம் மற்றும் சுகாதார இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இந்த நேர்மறையான மாற்றத்துக்கு மக்களாகிய நாம் தயாராக வேண்டும். பிளக்கர்களாக இருப்போர், தங்களை சுற்றிலும் தூய்மையாக்கி, நாட்டினை தூய்மையான நாடாக மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய கோவை மாநகராட்சி, குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் அகற்றவும், பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையை சுவாசிப்போம் ஓவியப்போட்டி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒன்பதாம் வகுப்புக்கும் மேல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த 3 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றிபெறும் படைப்புகள் செப்டம்பர் 26-ல் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

பொது நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பிளக்மேன் ஸ்ரீரிபு தாமன் பெவ்லி, கோவையில் உள்ள இளைஞர்களுடன் பேசுகிறார். பிட் இன்டியா முவ்மென்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக உள்ள இவர், செப்.26 ம் தேதி மாலை 6.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டில் உள்ள ஐஎம்ஏ ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறார்.

கருர், ஸ்ரீரங்கா பாலிமர்ஸ் தொழிலதிபர் கே.சங்கர், பெட் பாட்டில் மறு சுழற்சியில் முன்னணியில் உள்ளார். இந்தியாவின் நிலையான ஜவுளி மற்றும் பசுமை கள திட்டத்திலும் பங்கு வகிக்கிறார். ஐஎம்ஏ ஹாலில் நடக்கும் நிகழ்வில் இவரும் விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். சுற்றுச் சூழல், பெட் பாட்டில், பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் நிலையான சுற்றுச்சூழல் பற்றி பேசுகிறார். ராக் அமைப்பின் தலைவர் ஆர்.ஆர். பாலசுந்தரம் இந்த விழாவில் பேசுகிறார்.

வசுதேவ குடும்பகம் என்ற உலகம் ஒரு குடும்பம் என்ற ஜி20 மாநாட்டின் உணர்வோடு, தூய்மை பணியை சிறப்பாக செய்து, தனிநபர், குடும்ப நலனில் அக்கறை செலுத்துவோம். நமது புவிக்கும், அதன் சுற்றுச் சூழலுக்கும் நிலைத்தன்மைக்கும் நமது பொறுப்புக்கான அழைப்பு இது. நம் எதிர்கால சந்ததியினருக்காக " சுற்றுச் சூழலின் நலன் காப்போம்" என்று கூறினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிக்கி புளோ முன்னாள் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா சேடன், துணை ஒருங்கிணைப்பாளர் கல்பனா ரமேஷ் ஆகியோர் செய்து இருக்கிறார்கள். 

நிகழ்ச்சி நடைபெறும் ஐந்து மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக – உக்கடம் டாக்டர்.காமினி சுரேந்திரன், காந்திமாநகர், ஆஷா சவுந்திரராஜன், கொடிசியா : ஹேமா கோனா, ஜிவி ரெசிடென்சி : ஸ்ரீஷா மோகன்தாஸ் மற்றும் சாய்பாபா காலனி, விஷாலட்சி ஆகியோர் உள்ளனர்.

பிக்கி புளோ பற்றி இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ, டில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 

பிக்கி புளோ-வில், 8000 மகளிர் தொழில்முனைவோர் உள்ளனர். 37 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ள இந்த உறுப்பினர்கள், தொழில் முனைப்பையும், பயிற்சியும் அளித்த வருகின்றனர். மகளிருக்கு பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிகள், தலைமைப்பண்பு திட்டங்கள் போன்றவைகளை அளிக்கின்றனர்.

மகளிர் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும், திறனை வெளிப்படுத்தவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவியும் ஊக்கமும் அளிக்க இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது மகளிருக்கு உண்மையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.

பிக்கி புளோ கோவை கிளை 29 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஆனைகட்டி அருகே சீங்குலி கிராமத்தில் மகளிர் திறன்மேம்பாட்டு திட்டம் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனைகள் ஆகும் என கூறப்பட்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...