காரமடையில் இலவச கண் சிகிச்சை முகாம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு

காரமடை ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த கண் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேரந்து நடத்திய முகாமில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.


கோவை: காரமடையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காரமடை விநாயகர் வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், காரமடை லாரி உரிமையாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் விஜயபிரபு தலைமை தாங்கினார். செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தி னராக உதவி ஆளுநர் ஞான சேகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர்கள் அபிப்ஷா, ஸ்ரீதா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

காரமடை லாரி உரிமையாளர் சங்க தலைவர் ரவிக்குமார், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கே.ஆர்.விக்னேஷ், சிவசதீஷ்குமார், சரவணன், ஜெயக்குமார், காமராஜ், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...