ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பொது துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.


கோவை: பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை-பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்,அதிகாரிகள்,வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 1995ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் இணைத்திட வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும், ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்" ஆகிய ஏழு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...