கோவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவை வடக்கு வட்டம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு வட்டம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணி மேற்கொண்டனர்.



அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையை முழுவதும் சுற்றி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை அடுத்து இது குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...