திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள இ சேவை மையம் செயல்படாத காரணத்தினால் பல்வேறு திட்டங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே செயல்படாமல் உள்ள இ சேவை மையத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையம் முறையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் இணைப்பதிவாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் இ சேவை மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தும் முறையாக செயல்படுத்துவதில்லை.
இதனால் வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு தனியார் சேவை மையத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .எனவே கொளத்துப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையத்தை முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.