‌குடிநீர் பற்றாக்குறை - திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை அருகே நிலவும் கடும் வறட்சியை தடுக்க திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: குடிநீர் பற்றாக்குறை தடுக்க திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் உடுமலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்

உடுமலை அடுத்த ஆலம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் பூசாரிநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து மானுப்பட்டி கால்வாய் மூலமாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் 10 க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் இருப்பு உயர்வதுடன் 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தளி வாய்க்கால் மூலம் பாசனம் பெருகின்ற ஏழு குளங்களுடன் இந்த ஏரியையும் சேர்த்து தண்ணீர் வழங்கலாம் என்று கடந்த 2008 -ம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் பூசாரிநாயக்கன் ஏரிக்கு நீர் இருப்பு ஏற்றவாறு 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்இருப்பு பாதிப்பு அடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் சாகுபடி பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து குறிச்சிக்கோட்டை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக முறையான அரசாணை பெற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பூசாரிநாயக்கன் ஏரியை ஆதாரமாகக் கொண்ட பகுதியில் கடும் வறட்சி நிலவுவதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரிக்கு அரசு உத்தரவுப்படி தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...