மதுரை முதன்மை சுகாதார அலுவலருக்கு எதிர்ப்பு - கோவையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: மருத்துவர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஆணைகள் பிறப்பிக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி வந்தனர்.அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.



மதுரை சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை, மகப்பேறு மரண தணிக்கை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து முதன்மை சுகாதார அலுவலர் அத்துமீறி உள்ளே நுழைந்து இது சம்பந்தமாக மருத்துவர்களை மிரட்டி உள்ளார்.

மதுரை முதன்மை சுகாதார அலுவலர் மீது மருத்துவமனை நிர்வாகமும்,சுகாதாரத் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

முதன்மை சுகாதார அலுவலர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 6 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 2 மருத்துவர்களை வைத்து இரவு பகலாக வேலை வாங்குவதாக சுகாதார துறை மீது குற்றம் சாட்டினர்.

மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் மருத்துவத்தை தவிர மற்ற வேலைகளை அரசு இவர்களைச் செய்யச் சொல்லி கட்டாயபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் மகப்பேறு மருத்துவர்கள் அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளதாகவும் 40 மணி நேரம் செய்யக்கூடிய வேலையை 80 மணி நேரமாக செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறினார்.

போராட்டங்களுக்குப் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து அக்டோபர் 16-ம் அன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...