கோவையில் அரிய வகை வெள்ளை நிற நாகபாம்பு - பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது.


கோவை: தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கிருந்த வெள்ளை நிற நாகபாம்பை, பாம்பு பிடி வீரர் மோகன் என்பவர், பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு சென்ற பாம்புபிடி வீரர் மோகன் அந்த அந்த பாம்பை பார்க்கும் போது அந்த பாம்பானது பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கப்படும் பாம்பு என்பது தெரியவந்தது.



பின்னர் அந்த இரண்டடி நீளம் கொண்ட பாம்பை பத்திரமாக பிடித்த மோகன் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தார். கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டது. தற்போது மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...