திருப்பூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.


திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணியின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் அணயின் மாநில செயலாளர் பி.டி.சி.செல்வராஜ் வரவேற்றார். விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.



பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது “தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும்” என்றார்.

விழாவில் நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பவர் சேகர், நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...