லாட்டரி மார்டின் மீது குறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? - மார்ட்டினின் மனைவி விளக்கம்

தொழிலதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் பேசியுள்ளார்.


கோவை: லாட்டரி மார்டின் மீதுகுறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் ஆயிரம் கிலோ கேக் எடை தயாராகி வருகிறது.

கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி ஹாஸ் 6ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.



இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 1000 கிலோ தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் பெண்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய லீமா மார்டின்,



ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும் இந்த ஆண்டு1000"கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் நடைபெற்ற வருமானத்துறை சோதனை குறித்து பேசிய அவரது மனைவி லீமா ரோஸ் மார்டின், வருமான வரித்துறை அதிகாரிகள் கல்கத்தா பகுதியில் இருந்து திடீர் என வந்தார்கள் எனவும்

இன்று காலை சோதனை முடிவடைந்தது என்றார்.

மேலும் தேர்தல் வருகின்றது என்பதால் தவறான செய்தி அவர்களுக்கு சென்றுள்ளது எனவும் அதனால் வந்து உள்ளார்கள் எனவும் டாக்குமெண்ட்ஸ் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றார். மேலும் கோவை நகரப் பகுதிகளில் கேமரா பொருத்துவதற்காக 7 கோடியே 7 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நகரத்தைச் சுற்றி 240 கிலோ மீட்டர் சுற்றளவில் கேமராக்கள் பொறிப்பதற்கு கோவை மாநகராட்சிக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...