கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகன தொடர் திருட்டு - மூன்று பேர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுற்று வட்டாரம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 10 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.


கோவை: குற்றங்களை தடுக்க எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி வந்த நிலையில் கருமத்தம்பட்டி சேர்ந்த விஜய் (30) சோமனூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (22) மற்றும் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (27) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கருமத்தம்பட்டி ம‌ற்று‌ம் பொள்ளாச்சி பகுதியில் திருடு போன 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மேற்படி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்சப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...