கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் விசாரணைக்கு ஆஜர்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று ஆஜர் ஆக உள்ள ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.


கோவை: கோடநாட்டில் கொள்ளை,கொலை சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்தார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று ஆஜராக வந்துள்ளார்.



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அய்யப்பன், முதல்முறையாக இங்கு வந்துள்ளதாகவும் உள்ளே சென்றதால் என்ன நடக்கும் போகிறது என தெரியவரும் என கூறினார். ஜெயலலிதாவிடம் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஓட்டுநராக பணியில் இருந்ததாக தெரிவித்த அவர், சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியில் வருவது வரை வாகனத்தை மெயின்டைன் செய்துவிட்டு பின்னர் அதனைக் கொடுத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சொந்த காரணங்களால் தன்னால் வேலைக்கு செல்ல முடியாமல் போனதாகவும் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார். கனகராஜ் 2000 க்கு பிறகுதான் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். கனகராஜ் அவரது பழக்கவழக்கம் சரியில்லை என்பதாலும் சொல்வதைக் கேட்காமல் இருந்ததாலும் பணியில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிவித்த அவர், ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் என்ன சொல்லினாலும் கேட்க வேண்டும் அதனை பின்பற்ற வேண்டும் என ஸ்ட்ரிட்டாக இருப்பார் என தெரிவித்தார்.

ஆம் சரியாக இல்லை என்றால் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவித்தார். அதனால் அவரை வேண்டாம் அனுப்பி விடுங்கள் என ஜெயலலிதா கூறிவிட்டதாக கூறினார். கோடநாட்டில் இது போன்று சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எனக்கு தெரியாது. கனகராஜ் மட்டும் சிறிது நாட்கள் வேலை பார்த்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா இறந்த பிறகு அவரது 5 வண்டிகள் எனது கண்ட்ரோலில் இருந்தது. அதன் பிறகு சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது இந்த வாகனங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் தெரிவித்தார் எனக் கூறிய அவர், 2021 ஆம் ஆண்டு வரை பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் நாங்கள் அரசியல் சம்பந்தப்பட்டதில் தலையிட மாட்டோம் எனவும், அரசியலுக்குள் நாங்கள் செல்வது ஜெயலலிதாவிற்கும் பிடிக்காது என தெரிவித்தார். பத்தாண்டுகளாக பேச்சிலர் வாழ்க்கையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் தான் தங்கி இருந்ததாகவும் அதன் பின் திருமணமாகி தனியாக வந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கோடநாடு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் ஆஜரானதாகவும் தற்பொழுது இங்கு முதல்முறையாக வந்திருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...