நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - திருப்பூரில் தொடக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை திருப்பூரில் அயலக அணி செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திமுக தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் திருப்பூரில் மட்டும் ரெண்டு லட்சம் இலக்கு நிர்ணயம்.

நீட் தேர்வு விலக்கு எங்கள் இலக்கு என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய அளவில் திமுக சார்பில் திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக கையெழுத்து இயக்கம்தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் துவங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் அயலக அணி செயலாளருமான எம் எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வை மக்கள் இயக்கமாகக் கொண்டு சேர்த்து 50 நாட்களில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...