இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் நடைபெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: உடுமலையில் நடந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் தேங்காய் உரிப்பதற்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த அளவு கூலி பெற்றுக் கொண்டு தேங்காய் உரிக்கும் தொழிலை ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது எனவே தமிழக அரசு தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

பேரவை மாநாட்டில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார், தொழிற்சங்கம் மாவட்ட அமைப்பாளர் பால் நாரயணன், குடிமங்கலம் சுந்தர்ராஜன் மற்றும் உடுமலை குடிமங்கலம் நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.