கோவையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கன மழை - வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

கோவையில் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன்பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ரயில் நிலையம், செல்வபுரம், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.


கோவை: பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளுக்குள்ளும், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவில் அருகே உள்ள வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்ததால் வீட்டில் வசிப்போர் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவையில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவும் சுமார் 10 மணியளவில் கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ரயில் நிலையம், செல்வபுரம், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கணுவாய், தடாகம், துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.



சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.



அதுமட்டுமின்றி மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளுக்குள்ளும், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவில் அருகே உள்ள வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்ததால் வீட்டில் வசிப்போர் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.



இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் காரணமாக அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியது.



தற்போது தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.



கோவையில் மாநகரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...