உடுமலையில் கொப்பரை விற்பனை - 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 24 விவசாயிகள் 107 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போனது.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர். கொப்பரை ஏலத்தில் 24 விவசாயிகள் 107 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ 81.89 முதல் ரூ 87.89 க்கும் இரண்டாம் தர கொப்பரை ரூ 64.59 முதல் ரூ 75.89 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரூ 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...