கோவையில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி - அமைச்சர் முத்துசாமி தொடக்கம்

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: சென்னையில் இருந்து நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, பின்னர் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.



அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து நடைபயிற்சியை துவக்கி வைத்தார்.



இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.



இந்த நடைபயிற்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றிசெல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடை பயிற்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி,



இது ஏதோ ஒரு திட்டம் அல்ல. நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம்.

கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடை பயிற்சி மேற்கொள்வோர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தாலும் சாதாரண மக்களும் அதில் பங்கேற்று நடப்பதற்கு தான் இந்த திட்டம் துவக்கி இருக்கிறார்கள். அரசு பல்வேறு திட்டங்களை செய்திருக்கும் சூழலில் இவை அனைத்துமே மக்கள் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

நடப்போம் நலம் பெறுவோம் என்ற இந்த திட்டத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பேர் இதனை பயன்படுத்தினால் நிச்சயமாக ஆயிரம் பேர் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கும். மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையும் இதற்கான ஏற்பாடுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பதாகவும் மற்ற நாட்களிலும் இதனை பயன்படுத்தி கொள்வதில் எந்த தவறும் கிடையாது எனவும் கூறிய அமைச்சர் முத்துசாமி, இந்த நடைபயிற்சிக்கு அரசு சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார்கள் என்றும் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...