கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டி

அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பேண்டு வாத்திய போட்டியில், 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கடந்த 1944 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சமூகம் சார்ந்த பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருகிறது.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 22 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் பேண்ட் வாத்திய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான பேண்டு வாத்திய போட்டி அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில் 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை, ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் மூத்த வழக்கறிஞர் ரொட்டேரியன் ஏ கே எஸ் சுந்தர்வடிவேலு துவக்கி வைத்தார்.



போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வண்ண மயமான பேண்டு வாத்திய சீருடை அணிந்தபடி, போட்டியில் தங்கள் இசைத் திறமை, உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நேர்த்தியாக வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.

இதில் நடுவர்களாக பி ஆர் எஸ் பேண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு சிறந்த குழுவினரை தேர்வு செய்தனர். கலப்பு,மற்றும் மாணவர் குழு, மாணவியர் குழு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கலப்பு பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி, மாணவியர் பிரிவில் அவிலா கான்வெண்ட், மாணவர் பிரிவில் லாரன்ஸ் பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.



தொடர்ந்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் சுந்தரவடிவேலு வழங்கி கவுரபடுத்தினார். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் விஜய், செயலாளர் பாலசுப்ரமணியன், சேர்மன் குணசேகரன் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...