முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீதம் நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு,குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்புகள் என 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.



தமிழக அரசை கண்டித்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொழிலாளர்கள் கைகோர்த்து நின்றனர்.



இந்தப் போராட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கலி போராட்டமானது நடைபெற்றது. திமுக ஆட்சி வந்த பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் சிறுகுறு தொழில் நிறுவனங்களை முடக்கி உள்ளது. 2003-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலை கட்டணம் என்பது 35 ரூபாய் இருந்து வந்தது. 2022-ம் ஆண்டு முதல் நிலை கட்டணத்தை 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தி 430% கட்டண மடங்கை அதிகரித்து உள்ளனர். முக்கிய கோரிக்கையான வாழ்வாதாரத்தை பறிக்கும் 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...