உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

பனமரத்துபாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.



இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டாவது நாள் போராட்டத்தில் 75-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சட்டமேதை அம்பேத்கர் அனைவருக்கும் சமம் என சட்டம் இயற்றினார். சட்டப்படி அனைவரும் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



ஆனால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும். அதனால் சட்டமேதை அம்பேத்கரின் சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்தை கையில் ஏந்தி அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தெரிவிக்கையில், தாராபுரம் தாலுகாவில் உள்ள பனமரத்து பாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உப்பாறு அணைப் பகுதி விவசாயிகளுக்கு, கால் நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

நேரடியாக 6300 ஏக்கரும் மறைமுகமாக 15,000 ஏக்கரும் விவசாய நிலம் விவசாய பணிகள் எதுவும் நடைபெறாமல் விவசாயிகள் வருமானமே இன்றி வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அனைவரும் ஊரைக் காலி செய்து விட வேண்டும். இப்பகுதி விவசாயிகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உப்பாறு அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...