சரவணம்பட்டியில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப திறன் வளர்ப்பு போட்டியில் பள்ளி மாணவர்கள் அச்சத்தல்

பைதான் திட்டப் போட்டியில், முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின.


கோவை: லெட்ஸ் கோட் தமிழ்நாடு 2024 மூலம் தொழில்நுட்ப திறன் வளர்ப்பது தொடர்பான மூன்று மாத பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கபட்டது. இப்பயிற்சியின் இறுதியில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களால் பைதான் திட்டப் போட்டிகள் நடத்தபட்டது.

இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களை நடைமுறை பைதான் திறன்களுடன் சிந்தனையை தூண்டுவதும், புதுமையான திட்டங்களைக் காண்பிப்பதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டிதலில் பைதான் பயிற்சியை பெற்ற மாணவர்கள் சிஸ்கோ பைதான் சான்றிதழைப் பெற்றனர். இந்த பைதான் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கே.ஜி.மருத்துவமணையின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் பரிசுகளை வழங்கினர்.



இதில் முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின. மேலும் இந்த பைதான் போட்டிக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...