கோவை செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

முப்பெரும்விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா இன்று (பிப்.8) பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாரிச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் 8ம் வகுப்பு மாணவி துர்கா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...